Islamic Widget

November 07, 2010

சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாதவர் பிணம்

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். நீலக்கலர் சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source: Dinamalar

No comments:

Post a Comment