Islamic Widget

November 07, 2010

கடலூரில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்

கடலூர் : கடலூரில் கடலோர பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் வெளியேறினர். வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் நேற்று மாலை முதல் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட மூன்று மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் பீச்சில் உள்ள சிறுவர் பூங்கா கடல்....

நீரால் சூழ்ந்தது. கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் கடல் கொந்தளிப்பை கண்டு அலறியடித்து ஓடினர். அலையின் சீற்றம் காரணமாக முகத்துவாரம் வழியாக உப்பனாற்றில் கடல் நீர் உட்புகுந்ததால், அங்கு நிறுத்தியிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. உப்பனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து எஸ்.பி., பங்களா அருகே சாலையைச் சூழ்ந்தது. இரவு 7 மணிக்கு கடலோர கிராமங்களில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள் புகுந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதனையடுத்து சுப உப்பலவாடி, கண்டக்காடு பகுதி கிராம மக்கள் வெளியேறினர்.கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின்கோட்னீஷ், டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் தங்ராசு மற்றும் அதிகாரிகள் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், தாழங்குடா, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மேடான பகுதிக்குச் செல்ல ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. பள்ளி, கோவில், புயல் பாதுகாப்பு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த கடற்கரை கிராமமான புதுக்குப்பத்தில் நேற்றிரவு பலத்த காற்று வீசியது. மீனவர்கள் படகுகளை கரைக்கு இழுத்து வர முயன்றனர். அதில் ராஜி என்ற மீனவர் படகு மோதி படுகாயமடைந்தார். உடன், அவர் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்கு பின் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடை@ய @நற்றிரவு 11 மணியளவில் கடல் நீர் புகுவது குறைந்ததால் மக்கள் மீண்டும் ஊருக்குள் திரும்பினர். மாவட்ட நிர்வாகம் உஷார்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வருவாய், பொதுப்பணி, போலீஸ், தீயணைப்பு, மருத்துவம், நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், வருவாய்த் துறையினர் நேற்று மாலை கடலோர கிராமங்களில் முகாமிட்டு மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்தனர். கடற்கரை கிராம மக்களின் பாதுகாப்புக்காக புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தினர். புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் தகவல் அறிந்து கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கவும், தாலுகா அலுவலகங்களில் துணை தாசில்தார்கள் பணியில் இருக்கவும், அதேபோன்று, கடலோர கிராமங்களில் துணை தாசில்தார் மற்றும் பி.டி.ஓ.,க்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு நிலையங்களிலும் கோட்ட தீயணைப்பு அதிகாரி குமாரசாமி உத்தரவின் பேரில், 248 வீரர்களும் தயார் நிலையில் பணியில் உள்ளனர். கடலோர பகுதிகளில் உள்ள கடலூர், சிப்காட், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர் காப்பு கவசங்கள், ராட்சத ஏணிகள், கயிறுகள், 300 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரும் "ஹைமாஸ்' விளக்குகள், ஜெனரேட்டர் மற்றும் மரங்களை அறுக்கத் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment