தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரஇதழ் ஒன்றில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர் ஜைனுல்ஆப்தீன் பற்றி வெளியான செய்தியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாத்அத் மாவட்டச் செயலாளர் நிஸôர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அபர்துல் ரஜாக், பொருளாளர் சிராஜ், துணைத் தலைவர் முஜிபுர் ரகுமான், துணைச் செயலாளர்கள் உசேன், தஸ்தகீர், தொண்டரணிச் செயலாளர் தாதர், மருத்துவ அணிச் செயலர் இதாயத், ஜாகீர், மூசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source: Dinamani
No comments:
Post a Comment