October 11, 2010
கடலூர் - புதுச்சேரி சாலையை நான்கு வழியாக மாற்ற வேண்டும்
கடலூர் : போக்குவத்து மிகுந்த கடலூர் - புதுச்சேரி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் - புதுச்சேரி இடையே உள்ள 26 கி.மீ., தூரத்தை கடக்க சாதாரணமாக 45 நிமிடங்கள் ஆகிறது. "பீக்' அவர்சில் இன்னும் கூடுதல் நேரமாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் - புதுச்சேரி இடையே சாலையோர கிராமங்களைத் தவிர புதிய நகர்கள் உருவாகவில்லை. கிழக்கு கடற்கரை சாலையால் சாலை அகலப்படுத்தப்படும் என்கிற கனவு பொய்த்து
விட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சலுகைகள், வரி குறைவு, வீடு கட்ட மானிய உதவி, இலவசக் கல்வி உள்ளிட்ட சலுகையினால் பலர் புதுச்சேரியில் குடியேற முயன்றனர். இதன் விளைவாக சாதாரணமாக சில லட்சம் ரூபாயில் விற்பனையான மனைகளெல்லாம் கோடிக்கணக்கில் உயர்ந்தன. சாலையோரங்களில் பல புதிய நகர்கள் உருவாகி போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டன. அத்துடன் பல தொழிற்கூடங்களில் பணியாற்றும் பணியாளர்கள், கூலித் தொழிலாளர் கள் உள்ளிட்ட பலர் புதுச்சேரி சென்று வரவேண்டியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அதற்கேற்றவாறு சாலை அகலப்படுத்தாமல் 7 மீட்டர் அகலமுள்ள சாலை மட்டுமே உள்ளது. மேலும் மதகடிப்பட்டு - புதுச்சேரி, புதுச்சேரி - முள் ளோடை வரையிலான சாலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை கட் டுப்பாட்டில் உள்ளது. தற் போது இந்த சாலையை "நகாய்' எடுக்க திட்டமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பல பெரிய தொழிற் சாலைகள், பவர் பிளாண்ட் உருவாகவுள்ள இந்நகரத்தில் கடலூர் - புதுச்சேரி சாலையை தொலை நோக்கோடு நான்கு வழிச்சாலையாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment