Islamic Widget

August 08, 2010

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்

சிதம்பரம் : சிதம்பரம் நகரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறுகையில்:சிதம்பரம் நகரை மேற்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. சிதம்பரம் மேற்கு ரதவீதி, சிவபுரி, கவரப் பட்டு, வேணுகோபால் பிள்ளை தெரு, தாண்டவராயன் சோழகன் பேட்டை, ரயில்வே மேம் பாலத்தில் ரவுண்டானா ஆகிய சாலைகளும், ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். கீழவீதியில் உள்ள ஹைமாஸ் விளக்கை பாதுகாப்பு நலன் கருதி அகற் றப்படும். சிதம்பரம் சாலையில் சுற்றித்திரியும் கால் நடைகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து பட்டியில் அடைத்து விடுவர். நாளொன்றுக்கு அபதாரமாக 100 ரூபாய் வசூலிக் கப்படும். சம்மந்தப்பட்டவர்கள் தகுந்த ஆவணங் களை காட்டி பெற்றுக் கொள்ளாவிட்டால் தன் னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்படும்.
சிதம்பரம் பகுதிக்கு வரும் சரக்கு லாரிகளை கீழவீதியில் இருந்து கடைகளுக்கு எடுத்து எடுத்துச் செல்ல வேண்டும். மீறி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களில் பைக் குக்கு 20, காருக்கு 40, வேனுக்கு 50, பஸ்சுக்கு 100 ரூபாய் அபதாரம் விதிக் கப்படும். மேலவீதியில் கஸ்தூரிபாய் கடையில் இருந்து கஞ்சித்தொட்டி வரை இரு பகுதியில் இலவசமாக வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரத்தில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார். அப்போது டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment