Islamic Widget

December 07, 2012

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் விசாரணையை துரிதப் படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!


DEMOLITION-PIC-D-RRபுதுடெல்லி:பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 20 பேர் மீதான வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று ராய்பரேலி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இவர்கள் மீது குற்றவியல் சதித்திட்ட வழக்கை ரத்துச் செய்த அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. மரணித்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
எல்.கே.அத்வானி, கல்யாண்சிங், உமாபாரதி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சல், முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, வி.ஹேச்.டால்மியா, மஹந்த் அவைத்யானந்த், ஆர்.வி.வேதாந்தி, பரம்ஹம்ஸ ராம்சந்திரதாஸ், ஜகதீஷ் முனி மஹராஜ், பி.எல்.சர்மா, நித்யா கோபால்தாஸ், தரம் தாஸ், ஸதீஷ் நகர், மோரேஷ்வர் ஸாவே ஆகியோர் மீது குற்றவியல் சதித்திட்ட பிரிவையும் சுமத்தவேண்டும் என்று கோரி சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது.

No comments:

Post a Comment