Islamic Widget

September 25, 2012

பொன்முடியை கைது செய்ய காவல்துறை ஹைதராபாத் விரைந்தது

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி என்கிற தெய்வசிகாமணி. விழுப்புரம் அருகே வானூர் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் மண் அள்ள பொன்முடியும் அவர் மகனும், உறவினர்களும் உரிமம் பெற்றிருந்தனர்.ஆயினும் இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 2.46 இலட்சம் அலகு மண் அள்ளப்பட்டதாக வட்டாட்சியரிடம் முறையிடப்பட்டது. வட்டாட்சியரின் ஆய்வில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதில் அரசுக்கு ரூ.28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையில் மனு செய்யப்பட்டது.

தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவர் மகன் கவுதம சிகாமணி, உறவினர்கள் ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தம் உள்பட 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொன்முடி உள்பட 4 பேரைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது

விழுப்புரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் பொன்முடி இல்லாததால், அவர் ஹைதராபாத் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டதையடுத்து, பொன்முடியை கைதுசெய்ய காவல்துறை ஹைதராபாத் விரைந்துள்ளது.

No comments:

Post a Comment