Islamic Widget

July 11, 2012

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து 33 பேர் காயம்

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து 33 பேர் காயம்காட்டுமன்னார்கோவில் அருகே மேல் பருத்திக்குடியில் இருந்து ஒரு தனியார் மினி பஸ் இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு சிதம்பரத்துக்கு புறப்பட்டு வந்தது. பஸ்சை மேலபருத்திகுடியை சேர்ந்த டிரைவர் குருநாதன் (வயது 28) ஓட்டி வந்தார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். காலை 8.30 மணியளவில் அந்த பஸ் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வல்லம் படுகை - கருப்பூர் இடையே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையின் அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறினார்கள். உடனடியாக அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் பஸ் டிரைவர் குருநாதன், கண்டக்டர் மூவேந்தன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த ரகுராமன் (28), சுரேஷ் (29), ரகுவரன் (32) மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளான சுபா, ராஜேஸ்வரி, குமுத வள்ளி, கண்ணன், குமார் உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அறிந்ததும் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்து குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது 30 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய மின் பஸ்சில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தது விபத்துக்கு காரணம் என்று கூறினார்கள்.



 

No comments:

Post a Comment