Islamic Widget

June 12, 2012

உலக அமைதிக்காக கடலூர் முதுநகர்தொழிலாளி உப்பனாற்றில் 3 1/2 மணி நேரம் மிதந்து சாதனை

கடலூர் : கடலூர் முதுநகர் பச்சயைங்குப்பத்தை சேர்ந்தவர்
முருகானந்தம் (45) மரம் அறுக்கும் பட்டறை நடத்தி வருகிறார். மனிதநேயம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி நேற்று காலை 10.30 மணிக்கு இவர் பச்சையாங்குப்பம் கன்னி மாதா திட்டிலிருந்து உப்பனாற்றில் மிதக்க தொடங்கினார். சுமார் 2 கி.மீ தூரம் நீரின் போக்கிலேயே சொத்திக்குப்பம் பாலம் வரை மிதந்து சென்றார். நீரோட்டத்தில் மிதந்து சென்ற இவரை பச்சையாங்குப்பம், சொத்திக்குப்பம், ரசாப்பேட்டை பகுதி மக்கள் திரண்டு உற்சாகப்படுத்தினர்.
மதியம் 2 மணிக்கு தனது மிதக்கும் நிகழ்ச்சியை நிறைவு செய்து ஆற்றிலிருந்து கரையேறினார்.
இவருக்குப் பாதுகாப்பாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன், சங்கர், பாலாஜி உள்ளிட்ட நண்பர்கள் கட்டுமரத்திலும், படகிலும் பாதுகாப்பு அளித்து ஊக்கப்படுத்தினர்
இதுபற்றி முருகானந்தம் கூறியதாவது: 10 வயது முதலே தண்ணீரில் மிதக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. வீட்டின் அருகில் உப்பனாறு இருந்ததால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றில் மிதக்க பயிற்சி மேற்கொண்டேன்.

உலகில் மனித நேயம் தழைக்க மற்றும் உலகத்தில் அமைதி மலரவும் நேற்று ஆற்றில் மிதந்து என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.


மிதப்பதில் உலக சாதனை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
தற்போது உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment