Islamic Widget

June 10, 2012

பரங்கிப்பேட்டையில் ஆராய்ச்சி மைய மாணவர், மாணவி மீது "சிரிஞ்ச்' மூலம் ஆசிட் வீச்சு



பரங்கிப்பேட்டை: சாலையில் நடந்து சென்ற, பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய, மாணவர் மற்றும் மாணவி மீது, "சிரிஞ்ச்' மூலம் ஆசிட் ஊற்றியது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தகராறு: கடலூர் மாவட்டம், சேத்தியாத் தோப்பு அடுத்த, வீரமுடையாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார்,25; அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர். கோல்கட்டா விவேகனார் தெருவைச் சேர்ந்த மாணவர், சோம்நாத் சக்கரவர்த்தி,27, முகர்ஜி சாலையை சேர்ந்த மாணவி உபாசனா,25, இருவரும், சிதம்பரம் மாரியப்பா நகரில் தங்கி, பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில், பி.எச்டி., படித்து வருகின்றனர். கடந்த, 2010-11ம் ஆண்டு, அசோக்குமார், எம்.எஸ்சி., பயோ டெக் படித்த போது, ஆய்வறிக்கைக்காக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார். அப்போது, அவருக்கும், சோம்நாத் சக்கரவர்த்திக்கும் இடையே, தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.


பின் தொடர்ந்து...: இந்நிலையில், சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு, பஸ்சில், சோம்நாத் சக்கரவரத்தியும், உபாசனாவும் வந்து கொண்டிருந்தனர். பைக்கில் பின் தொடர்ந்து வந்த அசோக்குமார், அவர்கள் இருவரும், பஸ்சை விட்டு இறங்கியதும், "சிரிஞ்ச்' மூலம், அவர்கள் மீது ஆசிட்டை பீய்ச்சி அடித்தார். இருவர் மீதும், ஆசிட் பட்டது. அசோக்குமார், "பைக்'கில் தப்பினார். இதில், மாணவி உபாசனாவின் துப்பட்டாவும், அவர் கொண்டு வந்த குடையின் ஒரு பகுதியும் கருகின. மேலும் அவரது முதுகிலும், சோம்நாத் சக்கரவர்த்தியின் கைகளிலும், காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த மக்கள், அலறியடித்து ஓடினர். இருவரும், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து, தலைமறைவான அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment