புர்கா அணிந்து கொண்டு சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் புர்கா அணிய அரசு தடை விதிக்க வேண்டும்" என்று சிவசேனா கட்சி புதிய முழக்கத்தை எழுப்பியுள்ளது.
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ''சாந்தா குரூசில் உள்ள ஒரு மருத்துவமனையில் அக்டோபர் 15 அன்று இரண்டு மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டதாகவும் ரகசிய கேமராவில் பதிவான காட்சியில் அதைக் கடத்தியவர் புர்கா அணிந்து இருந்ததாகவும் எனவே இது போன்ற குற்ற செயல்களைத் தடுக்க புர்கா அணிவதைத் தடை செய்ய வேண்டும்" என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Source: inneram.com
தவறான செயல்களில் ஈடுபடுவோர் சில சூழ்நிலைகளில் இது போன்று புர்கா அணிந்து கொண்டு தவறு செய்வதை கண்டிக்க வேண்டிய நிலையில் ஒரு மத நம்பிக்கையை தகர்க்கும் வகையில் கருத்து கூறும் சிவசேனா, காவி உடை அணிந்து கொண்டு காம களியாட்டங்களில் சிலர் ஈடுபடுவதால் காவி உடைக்கு தடை கோருமா?
ReplyDelete