அதோ, இதோ என்று இழுத்தடிக்கப்பட்ட “தானே அரசு நிவாரணம்” ஒரு வழியாக பரங்கிப்பேட்டை மக்களுக்கு இன்று 8 வார்டுகளுக்கும் நாளை 8 வார்டுகளுக்கும் வழங்கப்படும் (ஏமாற்றமளிக்கும் நிவாரணம்) என்ற அறிவிப்பை தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் இடத்திற்கு விசிட் செய்தோம்.
1-2-10-11 ஆகிய நான்கு வார்டுகளுக்கு கும்மத்துப்பள்ளியில் வைத்து நிவாரணம் துவங்கியது. நான்கு வார்டு மக்களுக்கும் ஒரு இடத்தில் நிவாரணம் என்ற முடிவு மக்களை கசக்கிப் பிழியத் துவங்கி விட்டது.
குடும்ப அடையாள அட்டைக்கு நிவாரணம் என்ற பொது அறிவிப்பில் ஒரு உள் அறிவிப்பு அந்த அடையாள அட்டையில் கலைஞர் தொலைகாட்சி வாங்கியதற்கான சீல் இருக்க வேண்டும் என்பது. மக்களுக்கு முறையாக விளக்கப்படாத இந்த முடிவு மக்களை திணர வைத்து விட்டது. நிவாரணம் பெற வந்த பலருடைய அட்டையில் தொலை காட்சி வினியோக சீல் இல்லை. அந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலும் அங்கு கிடைக்கவில்லை.
குடும்ப அட்டை இல்லாத நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்கள் ஒரு புறம் என்றால் குடும்ப அட்டை இருந்தும் தொலைகாட்சி வாங்காத (மிகப்பெரிய சுதந்திர கடமையை? அலட்சியப்படுத்தியவர்கள்) வர்களின் அவதி இன்னொரு புறம்.
திட்டமிடாத திடீர் நிவாரண அறிவிப்பால் மக்களுக்கு கடும் அவதியே பரிசலிக்கப்பட்டுள்ளது. நான்கு வார்டு உறுப்பினர்களும், மக்களுக்கு டோக்கன் சிஸ்டத்திற்கு முயற்சிக்கின்றார்கள்.
நன்றி:pnotimes
No comments:
Post a Comment