இவ்வாண்டின் ஹஜ் பயணத்திற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி கடைசி வாரம் வெளியிடப்படும் என்றும், தமிழகத்துக்கான கோட்டா 11 சதம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இந்திய ஹஜ் குழுமத் தலைவர் 'பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஹஜ் குழுமத் தலைவர் 'பிரசிடெண்ட்' அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இவ்வாண்டு ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்கள்பெற கடைசி நாள் மார்ச் 31 ஆகும். குலுக்கல் ஏப்ரல் கடைசியில் நடைபெறும். பயணக்கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 31.
70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்குத் துணையாகவும் ஒருவர் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயணத்துக்காக திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை அளவு இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்த்த பட்டு உள்ளது. சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதிக் கட்டணங்கள் உயர்த்த படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேபோல், ஹஜ் பயண விமானக் கட்டணமும் அதிகரிக்கப் படவில்லை.
ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண் டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்க படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் தடை செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப் பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு சார்பான ஹஜ் பயணர் என்றில்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்க படும்."
மேற்கண்டவாறு இந்திய ஹஜ் கமிட்டித் தலைவர் 'பிரசிடென்ட்' அபூபக்கர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment