கடலூர்:கடலூர் அருகே, பள்ளி மாணவியர் விபத்தில் இறந்த சம்பவம் தொடர்பாக, நாகார்ஜுனா நிறுவன அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில், நேற்று முன்தினம், பள்ளி மாணவியர் சென்ற வேன் மீது பெரியக்குப்பம் நாகார்ஜுனா கம்பெனி ஊழியர்கள் சென்ற ஆம்னி பஸ் மோதியது.இந்த விபத்தில், வேனில் பயணம் செ#த கடலூர் செயின்ட் அன்னீஸ் (புனித அன்னாள்) மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் திருச்சோபுரம் அபிராமி (15) அகிலாண்டேஸ்வரி (12) பெரியகுப்பம் பவித்ரா (14) திவ்யா (15) ஆகியோர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர். அவர்களை, நாகார்ஜுனா கம்பெனி அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பெரியக்குப்பம் மற்றும் சற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சோபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரில் திரண்டு, அந்த வழியாக நாகார்ஜுனா நிறுவனத்துக்கு சென்ற மூன்று சுமோவை தடுத்தி நிறுத்தி அதில் பயணம் செய்த 10 அதிகாரிகளை சிறைபிடித்தனர். பணிக்கு சென்ற நாகார்ஜுனா ஊழியர்களையும் தடுத்து நிறுத்தினர்.கடலூர் டி.எஸ்.பி., பாண்டியன் மற்றும் போலீசார் கிராம மக்களை சமாதானம் செ#து அதிகாரிகளை விடுவித்தனர். ஆனால் வாகனங்களை விட மறுத்துவிட்டனர்.இந்நிலையில், திருச்சோபுரத்தைச் சேர்ந்த 40 பேர், பெரியகுப்பம் நாகார்ஜுனா நிறுவனம் முன் திரண்டு கற்களை வீசினர். அதில், ஆம்புலன்ஸ் முன்பக்க கண்ணாடியும், பாதுகாவலர்கள் அறை கண்ணாடியும் உடைந்தன.கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கம்பெனி நுழைவாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Source:dinamalar
December 22, 2010
சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
No comments:
Post a Comment