Islamic Widget

January 13, 2013

பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்

 
பரங்கிப்பேட்டை: பக்கீம்ஜாத் எனப்படும் மக்தூம் அப்பா பள்ளி குளத்தினை தூர் எடுப்பது மற்றும் பள்ளிவாசல் சுற்றியுள்ள இடத்தினை சுத்தம் செய்வது சம்மந்தமாக இன்று காலை 10 மணிக்கு மக்தூம் அப்பா பள்ளியில் அதன் நிர்வாகி ஆடிட்டர் ஐ முஹம்மது இல்யாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொறுப்பு எம். எஸ் அலி அக்பர், ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளி முஹல்லாவாசிகள் மற்றும் கிரீன் நோவா அமைப்பினர் கூடி குளம் தூர் எடுப்பது குறித்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.

 
இதன்படி பள்ளி குளத்தை தூர் வாரி சுற்றியுள்ள இடங்களை சீரமைப்பது என்றும், இதற்கு தேவைப்படும் தொகை 50% பெறப்பட்ட நிலையில் மார்ச் அல்லது ஏபரல் மாதத்தில் வேலையை துவங்குவதெனவும் உள்ளிட்ட முக்கி முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் இத்திட்டப் பணிக்காக ஹெச் லியாகத் அலி, எஸ். ஓ. செய்யத் ஆரிப், பொறியாளர் செய்யது சாகுல் ஹமீது, ஏ. மெய்தீன் அப்துல் காதர், ஏ. முஹம்மது யூசுப் அலி, எஸ். செய்யது அஹமது அலி, ஏ. முஹம்மது மஸ்தான், பி. காஜா மக்தூம், ஏ.ஜெ. அப்பாஸ் அலி, செய்யது ஆகியோர் நிர்வாக குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
 
நன்றி:mypno

No comments:

Post a Comment