Islamic Widget

April 07, 2012

பள்ளிவாசல் அமைக்க எதிர்ப்பு TNTJ ஆர்பாட்டம் நடத்த முடிவு!



( சில தினங்கள்ளுக்கு முண்னால் நமது pno.news யில் இந்த செய்தியை.. பதிவு செய்து இருந்தோம். http://ismailpno.blogspot.com/2012/03/blog-post_1185.html#more )

இரு தரப்பையும் அழைத்த போலீசார் 31. 03. 2012 அன்று சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் 28. 03 2012 அன்று பட்டபகலில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான பெண்கள் மதரசாவிர்காக அமைக்கப்பட்ட கீற்று கொட்டகையை கிழித்தெறிந்தனர்.


முஸ்லிம்கள் தரப்பில் மதரசா நிர்வாகி ரியாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மூஸா ஆகியோர் சிதம்பரம் தாலுகா உதவி கண்காணிப்பாளர். ASP துறை அவர்களை சந்தித்து தங்களது நியாயமான விளக்கத்தை கொடுத்தனர்.அனைத்தையும் கேட்ட ASP "பிரட்சனை உள்ளதால் அந்த இடத்தில மதரசா கட்டகூடாது" என கூறினார்.

முஸ்லிம்களின் இடத்தில் மதரசா கட்ட கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என கூறி வெளியேறினர்.ASP அவர்களே இப்படி நியாயமற்று பேசியதால் ASP தலைமையில் நடக்கும் சமாதான பேச்சு வார்த்தையில் கலந்துகொள் முடியாது என்றும் RDO தலைமையில் சமாதான கூட்டம் நடத்தினால் வருகிறோம் என்றும் முஸ்லிம்கள் கூறியதால்,31. 03.2012 போலீசார் தலைமையில் நடக்க இருந்த சமாதான கூட்டம் ரத்தானது.

இந்நிலையில் 31.03.2012 அன்று கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான சிலர் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் சாலை மறியல் செய்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்து RDO சமாதானம் செய்த பின்பே சாலை மறியல் முடிந்தது.



இந்நிலையில். இன்ஷாஅல்லாஹ்! இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறையும் மாவட்ட வருவாய்த் துறையையும் கண்டித்து வருகின்ற 14.04.2012 அன்று காலை 11.00 மணியளவில் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கடலூர் மாவட்டம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அநீதிக்கு எதிராக!! ஆர்ப்பரிக்க தயாராவோம்!!

இதில் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
 நன்றி:TNTJPNO

No comments:

Post a Comment