Islamic Widget

March 30, 2012

சிதம்பரம் அருகே பள்ளிவாசல் அமைக்க எதிர்ப்பு

சிதம்பரம், மார்ச் 29: சிதம்பரம் அருகே பள்ளிவாசல் அமைக்க கீற்று கொட்டகை கட்டுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் அப் பணி நிறுத்தப்பட்டது.

 சிதம்பரம் அருகே உள்ள எம்.ஆர்.வி. நகரில் சையத் அலி என்பவர் பள்ளிவாசல் அமைக்க சையதுல் அன்பியா மஸ்ஜித் என்ற அமைப்புக்கு 8 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். எம்.ஆர்.வி. நகரை ஒட்டியுள்ள தாமோதரன் நகர், சண்முகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 900 இந்து குடும்பங்களும், சுமார் 15 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளன.


 பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் சையத் அலி தானம் கொடுத்த இடத்தில் பள்ளிவாசல் அமைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் தடுத்ததால் போலீஸôரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தள்ளுபடியானது.

 இதற்கிடையில் சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சித் தலைவர் நடனமயிலோன் ஆகியோர் அங்கு அரபிக் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி முஸ்லிம் மக்கள் சம்மந்தப்பட்ட இடத்தில் புதன்கிழமை கீற்று கொட்டகை அமைத்துள்ளனர்.

 வியாழக்கிழமை இதையறிந்த இந்து ஆலயப் பாதுகாப்பு குழுவினர் ஜோதி.குருவாயூரப்பன், வழக்கறிஞர் கீதா மற்றும் அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கீற்றுக் கொட்டகையை பிரித்துள்ளனர். தகவலறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை, இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸôர் அங்கு சென்று கொட்டகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் சமரசம் செய்து வரும் 31-ம் தேதி இருதரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காணலாம் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

No comments:

Post a Comment