புது தில்லி : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு இன்று மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நிதி பற்றாக்குறை, ஏறும் எண்ணை விலைகள், மெதுவாகும் வளர்ச்சி, ஈரோ பிரச்னை முடிவடையாதது போன்றவை ரூபாயின் வீழ்ச்சியில் மிகப் பெரும் காரணிகளாக கருதப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன் தான் ரிசர்வ் வங்கி 50 ரெபோ புள்ளிகளை குறைத்தது குறிப்பிடத்தக்கது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 52.14 ஆக குறைந்துள்ளது. இன்றைய விலையில் ஒரு டாலர் 52.14 ரூபாயும் ஒரு சவூதி ரியாலின் மதிப்பு 13.90 ரூபாயும் ஒரு குவைத் தினார் 187.25 ரூபாயும் ஒரு அமீரக திர்ஹத்தின் மதிப்பு 14.20 ரூபாயாகவும் உள்ளது
No comments:
Post a Comment