Islamic Widget

April 14, 2012

ஈராக் போர் டென்மார்க்கில் விசாரணைக்கமிஷன்


கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டென் மார்க் எதற்காக ஈராக்கிற்குள் நுழைந்தது..? இதுவரை இந்த விவகாரத்தில் நாமறிந்த பொய்யான கற்பனை களை தூக்கி வீசிவிட்டு, உண்மைகளை மக்கள் அறி யும் காலம் வரவிருக்கிறது. ஈராக் போர் குறித்த ஆய் வை மேற்கொள்ள டென்மார்க் பாராளுமன்றத்தில் விசாரணைக் கமிஷனை அமைக்கும் பிரேரணை நே ற்று முன் வைக்கப்பட்டது.இந்தப் பிரேரணை தமக்கு எல்லையில்லாத மகிழ்வைத் தருவதாக என்கில்ஸ் லிஸ்ற் கட்சி தெரிவித்துள்ளது.
போருக்கு போன உண்மையான காரணம், கை திகளை சித்திரவதை செய்தது போன்ற பல்வேறு இரகசியங்கள் அம்பலத்திற்கு வரப்போவது டேனிஸ் அரசியலில் நல்லதொரு மாற்றம் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த பிராங் ஏசன் தெரிவித்துள்ளார்.
மறு புறம் இந்தப் போரில் மறைந்துள்ள உண்மைகளை கிளறி எடுத்து அம்பலப்படுத்துவது முன்னைய வென்ஸ்ர அரசை பழிவாங்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி என்று பழைய வெளிநாட்டு அமைச்சர் பிய ஸ்ரீ மூலர் சீறி எழுந்துள்ளார். ஈராக் போருக்கு டென்மார்க் போனபோது பழைய பிரதமர் ஆனஸ் போ ராஸ்முசனுடன் இவருக்கும் சிவப்பு மை ஊற்றப்பட்டது தெரிந்ததே. தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல இவர் துடித்தெழுந்துள்ளார்.

ஆனால் இவருக்கு பதிலுரைத்த தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேல் தமது நோக்கம் பழைய அரசை பழிவாங்குவது அல்ல என்று கூறினார். இதுபோன்று மீண்டும் தப்பான பாதையில் போருக்கு போகக்கூடாது என்று வழிகாட்ட இந்த ஆய்வு அவசியம் என்றார். உண்மையை மக்களுக்கு அறியக் கொடுப்பது பழிவாங்கல் அல்ல பகுத்தறிவுள்ள செயல் என்று பியஸ் ரீ மூலருக்கு இடித்துரைத்துள்ளார்.

இதேபோல பழைய இணைவாக்க அமைச்சர் சோன்ட் பின்னும் சீறிச் சினந்துள்ளார். இது தம்மை பழிவாங்கும் செயல் என்று கூறிய அவர் தமது ஆட்சியின் மீது சேறு வீசும் செயல் என்று பீறிட்டு முழங்கினார். போருக்கு போவது நமது உரிமை அதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். ஆனால் அக்காலத்தே பாதுகாப்பு அமைச்சராக இருந்து, பதவி விலகிய சோன் கேத கூறும்போது எந்த விசாரணை வந்தாலும் தாம் அதை சந்திக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். தமது கருத்துக்களை ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். ஈராக் போர் தொடர்பாக டேனிஸ் படைகள் நடாத்திய அடாவடித்தனங்களை அம்பலப்படுத்திய நூல் வெளியாகிய பின் இவர் பதவி விலகியது தெரிந்ததே.

அதேவேளை டேனிஸ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மிக்கேல் சூபியா கூறும்போது ஆய்வுக் கமிசன் தலைமைப் பதவிக்கு பலர் நியமிக்கப்பட்டு, அவர்கள் விலகிவிட்டார்கள். ஈராக் போர் ஓர் ஆழமான விவகாரம், இதில் கலந்துள்ள நுட்ப நுட்பாந்திரங்களை விளங்கி விசாரிக்கும் ஆற்றலுள்ள நீதித்துறையினர் இங்கு இல்லை. எனவே கமிஷனின் பணிகள் செவ்வையாக நடைபெறுமா என்ற சந்தேகப் புரளியையும் கிளப்பினார்.

கைப்புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி எதற்கு என்பது பழமொழி… இந்தப் போரின் மர்மம் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனால் நமக்கு தெரியாது என்பதுதான் கூத்தாட்டமாக உள்ளது.

அதேவேளை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் பழைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஊல சோன் ரஸ்ய உளவுப்பிரிவிடமிருந்து இலஞ்சம் வாங்கியவர் என்ற குற்றச்சாட்டை கிளற இன்னொரு குழு களமிறங்கியுள்ளது. தற்போது எஸ்.எப் கட்சியின் மந்திரியாக இருக்கும் இவர் டென்மார்க்கில் கம்யூனிசத்தை வளர்க்க ( 1987 – 91 ) ஐந்து மில்லியன் குறோணரை சோவியத் உளவுப்பிரிவான கே.ஜி.பியிடமிருந்து வாங்கியுள்ளார். இதற்கான ஆவணங்களை மொஸ்கோவில் இருந்து எடுத்துவர நான்கு வரலாற்று ஆய்வாளர் முடிவு செய்துள்ளனர். ஈராக் போர் அறிக்கையில் பழைய ஆட்சியை அம்பலப்படுத்தினால் புதிய ஆட்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் ரஸ்யாவுடன் தொடர்பு பட்டிருந்த விடயம் அம்பலமாகும் என்றளவுக்கு விவகாரம் சூடு பிடித்துள்ளது.

No comments:

Post a Comment