நாகப்பட்டினத்தை அடுத்த சிறுநன்றியூர் அருகே உள்ள புங்கனரை சேர்ந்தவர் முகமது
பக்ருதீன் (வயது 47). இவரது மைனத்துனர் பஜிர்உல்லா. இவர் வெளிநாட்டில் வேலை
பார்த்து வருகிறார். ஊருக்கு வந்து விட்டு இன்று வெளிநாட்டுக்கு புறப்பட்டார்.
அவரை முகமது பக்ருதீன் மற்றும் குடும்பத்தினர் சென்னை சென்று வழி
அனுப்பினார்கள். பின்னர் அவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். முகமது
பக்ருதீன் அவரது மாமியார் ஹபூர்ன்னிசா, அவரது பேரன் அசன்அலி (9), வக்கீல்
கார்த்திக் (38) ஆகியோர் இருந்தனர்.
காரை முகமது பக்ருதீன் ஓட்டி வந்தார். காலை 7.30 மணியளவில் கார் சிதம்பரம்
அருகே உள்ள அழிஞ்சிமேடு என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி
கார் மீது மோதியது. இதில் முகமது பக்ருதீன், ஹபூர்ன்னிசா ஆகியோர் அந்த இடத்திலேயே
உடல் நசுங்கி பலியானார்கள். வக்கீல் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவர் சிதம்பரம்
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவன்
அசன்அலி லேசான காயத்துடன் தப்பினான்.
கார் லாரி மீது மோதிய வேகத்தில் சுக்குநூறாக நொறுங்கி லாரிக்கு அடியில் சென்று
சொருகிக் கொண்டது. சிதம்பரம் உதவி சூப்பிரண்டு துரை, இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்
சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பர செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில்
ஈடுபட்டனர்.
விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இந்த
விபத்தினால் சிதம்பரம் பை-பாஸ் சாலையில் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment