Islamic Widget

January 12, 2012

லத்திகா சரணை டிஜிபியாக நியமித்தது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு


Letika Charan

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லும். பதவி நியமனத்திற்கு மூப்பு நிலை மட்டுமே காரணம் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அப்போதைய தீயணைப்புத்துறை டி.ஜி.பி.நடராஜ், தன்னை விட மூப்பு குறைவான லத்திகா சரணின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இ‌ந்த மனுவை ‌‌விசா‌ரி‌த்த உய‌ர்‌‌நீ‌திம‌ன்ற‌ம், ம‌த்‌திய ‌தீ‌ர்‌ப்பாய‌‌த்தை அணுகுமாறு நடராஜு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டது. இதனையடுத்து நடராஜ் ம‌த்‌திய ‌தீ‌ர்‌ப்பாய‌த்‌தி‌ல் மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்தா‌‌ர். நடராஜின் மனுவை விசாரித்த மத்திய தீர்ப்பாயம் லத்திகா சரணின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து டி.ஜி.பி.லத்திகா சரண், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இவ்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் வழக்கின் ‌தீ‌ர்‌ப்பை தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் த‌ள்‌ளி வ‌‌ை‌த்தது.

இ‌ந்த நிலையில் இன்று இ‌ன்று இவ்வழக்கில் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம், த‌மிழக டி.‌ஜி.‌பி.யாக ல‌த்‌திகா சர‌ண் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டது ச‌ரியே. பத‌‌வி உய‌ர்வு‌க்கு ப‌ணி மூ‌ப்பு மட்டுமே அடி‌ப்படை காரண‌ம் அ‌ல்ல எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

No comments:

Post a Comment