கடந்த டிசம்பர் 30-ந் தேதி கடலூர் – புதுவை இடையே கரையைக் கடந்த தானே புயலின் தாக்குதால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பரங்கிப்பேட்டையின் மொத்தமுள்ள 18-வார்டில் 1,2,10,11, ஆகிய வார்டுகளை சேர்ந்தோருக்கு இன்று காலை முதல் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி கும்மத்பள்ளியில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கும்மத்பள்ளி தெருவில்ஆண்கள் -பெண்கள் அதிக கூட்டம் காணப்படுகிறது. காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
ஏனைய வார்டுகளில் உள்ளோருக்கு நாளை வழங்கப்படுகிறது. சிதம்பரம் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளால் இந்நிவாரண உதவித்தொகை ரூ.2,500 குடும்ப அட்டையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
பரங்கிப்பேட்டையில் உள்ள குடும்ப அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 6691-ல் 6153 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இவற்றில் கடந்த 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தமிழக அரசின் வண்ண தொலைக்காட்சி பெட்டி பெற்றவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவித் தொகை தற்போது வழங்கப்படுகிறது, தொலைக்காட்சி பெட்டி அப்போது பெறாதவர்களுக்கு தற்போது இல்லை என்பதால் ஒரு சிலர் திரும்பி செல்வதை பார்க்க முடிகிறது.
எஞ்சியிருக்கும் 538-ல் தற்போது வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளும், பொருட்கள் ஏதும் வாங்காத குடும்ப அட்டைகளும் இருப்பதால், அவர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுவது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
நன்றி:mypno
No comments:
Post a Comment