Islamic Widget

January 06, 2012

பரங்கிப்பேட்டையில் ஜெ. மீதான வழக்கு: 39-வது முறையாக ஒத்திவைப்பு.


பரங்கிப்பேட்டை: தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததால் தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கின் விசாரணை 39-வது முறையாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்ததால், அவர் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
தடை உத்தரவினால் இதுவரை இவ்வழக்கு 38 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கோமதி சக்தி சொருபு இவ்வழக்கை பிப்ரவரி 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment