வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை “தானே” என்று பெயரிடப்பட்டு கடலூர் – புதுவை இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் பரங்கிப்பேட்டை நகரில் மின்நிறுத்தம் செய்யப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அவ்வாறு நடைப்பெறாமல் இரவு 10.45 மணிக்கே நிறுத்தப்பட்டது. முன்னதாக சின்னக்கடை பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் தீப்பொறி கிளம்பிய தகவலின் பேரில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
நேற்று இரவு 12 மணி முதல் லேசாக தொடங்கிய காற்று நேரம் செல்ல-செல்ல சூறாவளி காற்றாக உருவெடுத்து பரங்கிப்பேட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத தாங்கெண துயரத்தினை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்மிடையே கருத்து தெரிவித்த முதியவர் ஒருவர் 1971-1972 காலக்கட்டத்தில் இதுப்போன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.இப்புயல் ஏற்படுத்திய கடும் சேதம் காரணமாக ஏராளமானோர் தங்கள் வீடுகளின் மேற்கூரை / கதவுகள் / வேலி / சுவர் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர். அங்கு – இங்கு என்றில்லாமல் எல்லா இடத்திலும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்புயலின் காரணமாக பல இடங்களில் மரங்கள் – மின்கம்பிகள்- மின்சார கம்பங்கள் – சுவர்கள் ஆகியவை இடிந்துள்ளன. பரங்கிப்பேட்டை நகரில் உள்ள ஒரு வீட்டில் குளிர் சாதன இயந்திரம் (AC) தனியாக பறந்து சென்று அருகில் உள்ள வீட்டின் கூரையில் காணப்பட்டது. இவற்றை அகற்றுவதில் வழக்கம் போல பரங்கிப்பேட்டை இளைஞர்களின் பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்தது.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு சகோதரர்களும் தங்கள் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். காதிரியா பள்ளியில் அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி s.o.செய்யது ஆரிஃப், ஆயிஷா லாரி உரிமையாளர் J.M.ஹனிபா ஆகியோர்களின் ஏற்பாட்டின் பேரில் சுமார் 150 கிலோ அரிசியில் சமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் செல்போன் சார்ஜ் செய்யாமல் தவிக்கும் சகோதரர்களுக்கு கெவின்ஸ் பால் வினியோகஸ்தரும், பரங்கிப்பேட்டை நகர தி.மு.க 6-வது வார்டு செயலாளருமான M.S.ஜாபர் சரீப் & (GTC Groups) தனது சொந்த செலவில பேட்டரி சார்ஜ் செய்ய உதவி புரிந்தமையும் பாராட்டுக்குரியது.
மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் செல்போன் சார்ஜ் செய்யாமல் தவிக்கும் சகோதரர்களுக்கு கெவின்ஸ் பால் வினியோகஸ்தரும், பரங்கிப்பேட்டை நகர தி.மு.க 6-வது வார்டு செயலாளருமான M.S.ஜாபர் சரீப் & (GTC Groups) தனது சொந்த செலவில பேட்டரி சார்ஜ் செய்ய உதவி புரிந்தமையும் பாராட்டுக்குரியது.
நன்றி:mypno
No comments:
Post a Comment