மாவட்டத்தில் கோரத்தாண்டவமாடிய ‘தானே’ புயல் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் வீடு இடிந்தும், மின்சாரம் பாய்ந்தும் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரலாறு காணாத புயல் என்று நமது வாசகர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார்.
கடலூரில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அமுதவள்ளி தெரிவித்துள்ளார்.
கடலூர்- சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் அச்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பரங்கிப்பேட்டை பகுதியில் 125 கி.மீ வேகத்துக்கு காற்று வீசியதால், பெரும்மரங்களும் கூட வீழ்ந்துள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு தொடர்புகளும் செயலிழந்துள்ளன.
கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் வடக்கே உள்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது
புயல் மிகக் கடுமை என்ற நிலையில் இருந்து கடுமை என்ற நிலைக்கு மட்டுமே வந்திருப்பதாகவும் அடுத்த 12 மணி நேரத்துக்கு பயங்கரமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment