வங்ககக்கடலில் சென்னை அருகே மையம் கொண்டுள்ள தானே புயல் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள நெல்லூர், கிழக்கு கோதாவரி, குண்டூர், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடல் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. அங்குள்ள ஏராளமான கடலோர கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. இதையறிந்ததும் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உப்பாடா, ஏடரேள, செக்லேட்பள்ளி ஆகிய கிராமங்களில் 20 மீட்டர் உயரத்திற்கு கடல்நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
அவர்களுக்கு தேவையான வசதிகளை ஆந்திர அரசு செய்து தருகிறது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். விசாகப்பட்டினம் பகுதி யில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற 18 மீனவர்கள் மாயமானார்கள் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment