Islamic Widget

December 30, 2011

புதுவை, கடலூர் மாவட்டத்தை கோரத்தாண்டவமாடிய "தானே'' புயல்


தமிழகம் மற்றும் புதுவையில் பேயாட்டம் ஆடிய  “தானே”  புயலுக்கு 7 பேர்  இதுவரை பலியாகி உள்ளனர்.

தானே புயல் இன்று காலை 6.30-7.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கடலூர் மற்றும் புதுவைக்கு இடையில் கரையைக் கடந்து மேற்குநோக்கி நகர்ந்தது

குறிப்பாக, தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலும், புதுவையிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுவையில் வானராபேட்டை கிராமத்தில் 45 வயது நபர் ஒருவர் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.


புயல் கரையைக் கடந்தாலும் கனமழை பெய்து வருவதால் அரசு உஷார்நிலையில் இருந்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் சேர்த்து 600 இடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயல் காரணமாக சில தொடர்வண்டிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மற்றும் சில தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து குவைத் மற்றும் மலேசியாவுக்கு செல்ல வேண்டிய பன்னாட்டு விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன.

புதுவையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக புதுவை ஆட்சியர் எஸ்.பி.தீபக் குமார் தெரிவித்தார்.

புயல் காரணமாக பல இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக பலத்தமழையும் பெய்து வருகிறது. புதுவையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment