Islamic Widget

December 06, 2011

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்

bbசென்னை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் முஸ்லிம்களின் இறையில்லமும், இந்தியாவின் வரலாற்று சின்னமுமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார ஹிந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளால் இடித்துத்தள்ளப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் முஸ்லிம்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.மேலும் இந்த பயங்கரவாத செயலை புரிந்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர்.
நீதி மறுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் அநீதிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் சார்பாக கண்டன நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
தமிழகத்திலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பாக கண்டன போராட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனு மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்கு தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். தெஹ்லான் பாக்கவி, அ.மார்க்ஸ், களந்தை பீர்முஹம்மது உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாப்ரி மஸ்ஜித் மீட்பு ஓர் வரலாற்றுக் கடமை என்ற தலைப்பில் சென்னை, கோவை,மதுரை, நெல்லை ஏர்வாடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் மாபெரும் கருத்தரங்கமும், தமிழகம் முழுவதும் வீடு வீடாக துண்டுபிரசுரங்கள் வழியாக விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment