Islamic Widget

December 05, 2011

இந்தியர்களின் வீடுகளில் 1,63,44,000 கிலோ தங்கம்!!!

Goldலண்டன்: உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது.
Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 907 கிலோ.
இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.63 லட்சம் கோடி).
இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில் பெரும்பாலானதை தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பருக்குள் 64 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆனாலும், உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் மக்களும் இந்தியர்கள் தான்.
கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு (capital goods) அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்யும் 3வது மிகப் பெரிய விஷயமும் தங்கம் தான். கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவையில் 92 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதில் சீன மக்கள், இந்தியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment