பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் கடந்த 3
நாட்களாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையிலும் இந்த சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ்நிலையங்களில் இரவு- பகலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள தர்பார் லாட்ஜிலும் இதேபோல் நேற்றிரவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர் தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கி கைது செய்தனர். பிடிபட்டவர்கள் பெயர் வருமாறு:-
1. சாதிக்பாட்ஷா என்ற துராப் (வயது 28). மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்தவர்.
2. மக்தும்அலி (வயது 25) கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர். இவர்களிடம் இருந்து கத்தி மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் வெளிநாட்டு பட்டன் கத்தியும் இருந்தது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிசம்பர் 6) சென்னையில் பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபட இவர்கள் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 6 மாதமாக ஐஸ்அவுஸ் பகுதியில் தங்கி இருந்து பல பேருக்கு இவர்கள் பல்வேறு பயிற்சி கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 2 பேரையும் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று மதியம் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நன்றி: மாலை மலர்
ஊர் ஜாமாஅத் இந்த போலியான கைதுக்கு எதிராக களம் காணுமா அல்லது வோடிக்கை பார்க்குமா..????
கண்டிப்பாக அந்த அப்பாவி தன்டிக்கப்பட கூடாது. ஊர் ஜாமாஅத் இதுக்கு என்ன நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்துயிருந்து பார்ப்போம்!!!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteThanks for your information
Ali Abideen