விழுப்புரம் மாவட்டம் தி. மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களை வழக்கு விசாரணை எனக் கூட்டிச் சென்று வன்புணர்வு செய்த காவல்துறையினரை இன்னும் ஏன் கைது செய்ய வில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் பொதுமக்கள் மீது சிறிய அளவில் பாலியல் புகார் வந்தால் உடனே கைது செய்யும் காவல்துறையினர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது வரும் புகார்கள் மீது நவடிக்கை எடுத்து கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.உயர்நீதிமன்றக் கேள்விக்குப் பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப் பட்டுள்ளது என்றும் புலன் விசாரணைக்குப் பின்னர் குற்றம் புரிந்தவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் தமிழக அரசின் நஷ்ட ஈடு கற்பை இழந்து நிற்கும் பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment