Islamic Widget

November 23, 2011

முஸ்லிம்களுக்கு அரசு நலத்திட்டங்கள்



 
அரசு நலத்திட்டங்களை இஸ்லாமிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் செல்விராமஜெயம் தெரிவித்தார். சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். இதில் அமைச்சர் செல்விராமஜெயம் பேசியது: இஸ்லாமிய சமுதாய பெண்களை பெரும்பாலும் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இப்போது அச்சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பேர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பயில்கின்றனர். தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

 இதன்மூலம் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். சிதம்பரத்தில் பெண்கள் கல்லூரி தொடங்கி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அரசு கலைக் கல்லூரியும் உள்ளதால் அரசு சார்பில் கல்லூரி தொடங்க இயலாது.

தனிநபர் யாரேனும் கல்லூரி தொடங்கினால் அதற்கு அரசு உதவி செய்யும் என்றார் அமைச்சர்.கோட்டாட்சியர் எம்.இந்துமதி, நகர்மன்றத் தலைவர் நிர்மலா சுந்தர், டவுன் ஹாஜி சாதிக்பாஷா, மகபூப்உசேன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment