மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடியதால் கடலூர் பாமக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகனின் தரப்பினர் கடலூர் பாமக அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என்றும் அலுவலகம் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பாமக துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை கொண்டாடி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
இதனால் கடலூர் பாமக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை உறுதிப்படுத்திட 3 தரப்பினரையும் தகுந்த ஆவணங்களுடன் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அமுதவல்லி உத்தரவிட்டார்.
இதற்கிடையே இன்று கடலூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி கட்சி அலுவலகம் தொடர்பாக பிரச்சினை ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை தாசில்தார் எழிலன் சீல் வைத்தார்.
பாமக மாநில இணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த வேல் முருகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாககூறி கடந்த 31 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகனின் ஆதரவாளர்கள் பாமக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதோடு, டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் உருவபடத்தையு கிழித்து எறிந்தனர்.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகனின் தரப்பினர் கடலூர் பாமக அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என்றும் அலுவலகம் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பாமக துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை கொண்டாடி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
இதனால் கடலூர் பாமக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை உறுதிப்படுத்திட 3 தரப்பினரையும் தகுந்த ஆவணங்களுடன் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அமுதவல்லி உத்தரவிட்டார்.
இதற்கிடையே இன்று கடலூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி கட்சி அலுவலகம் தொடர்பாக பிரச்சினை ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை தாசில்தார் எழிலன் சீல் வைத்தார்.
No comments:
Post a Comment