Islamic Widget

November 13, 2011

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் 2,000 பேர் பயனடைந்துள்ளனர்: செல்வி ராமஜெயம்



கடலூர் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கம் கொடுக்கும் திட்டத்தில் இதுவரை 2,000 பேர் பயனடைந்துள்ளனர்'' என சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த மணிக்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் கிராமத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் புஷ்பராணி தலைமை தாங்கினார். சேர்மன் அசோகன், துணை சேர்மன் திருமாறன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., இந்துமதி வரவேற்றார். 131 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கி சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில்,

"கடலூர் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கம் கொடுக்கும் திட்டத்தில் இதுவரை 2,000 பேர் பயனடைந்துள்ளனர். ஒன்னரை ஆண்டுகளில் அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு விடும்' என்றார். விழாவில் ஒன்றிய ஆணையர்கள் துரைசாமி, ராஜாராமன், ஒன்றிய செயலர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி, ஊராட்சி செயலர் அருள்மணி, செல்லப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment