Islamic Widget

August 21, 2011

மீனவர்கள் மோதல் எதிரொலி10 நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே இரு மீனவ கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 10 நாட்களாக மீன் பிடிக்கச் செல்லாததால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 10ம் தேதி பஸ்சில் சென்ற போது தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த சாமியார்பேட்டை, புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதுப்பேட்டை கிராத்திற்குள் புகுந்து தாக்கினர்.
இதில் அரசு துணை சுகாதார நிலையம், வீடுகள், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சாமியார்பேட்டை, புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 54 பேரை கைது செய்தனர்.இந்த மோதல் சம்பவத்தால் கடந்த 10 நாட்களாக சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.இதனால் அன்னங்கோயில் துறைமுகப் பகுதியில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மீன்கள் அனுப்புவது தடைபட்டுள்ளது. மீனவர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் நான்கு கிராம மீனவர்களுக்கு கடந்த 10 நாட்களில் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் உடனடியாக சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

source: dinamalar

No comments:

Post a Comment