Islamic Widget

June 13, 2011

நாளை முழு சந்திர கிரகணம்!

நாளை இரவு நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழும் நீண்ட நேர முழு சந்திர கிரகணமாக இது இருக்கும் என்றும், இது நாளை இரவு 12:52 க்கு துவங்கி சுமார் 100 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2000 ஆண்டில் ஜூலை 16ம் திகதி நீண்ட நேர முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.
இது இந்த நூற்றாண்டிலேயே மிகவும் அடர்த்தியான இருளைக் கொண்ட முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.பிர்லா பிளானடோரியத்தின் இயக்குநரும், ஆய்வாளருமான தேவிபிரசாத் துரை கூறுகையில், பூமியின் மத்திய பகுதியின் நிழலில் சந்திரன் பயணிப்பதுதான் இந்த சந்திர கிரகணத்தின் சிறப்பு தன்மை என்றும் அதன் காரணமாக மற்ற கிரகணங்களைவிட மிகவும் அடர்த்தியான இருளைக் கொண்டதாக இது இருக்கும் என்றும் குறியுள்ளார்.இந்தியாவில் எல்லா இடங்களிலும் இச் சந்திர கிரகணம் நன்றாக தெரியும். மேலும் ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் பாதியிலும்,மத்திய கிழக்கு நாடுகளிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் இது தெரியும்.

No comments:

Post a Comment