Islamic Widget

March 10, 2011

சாஷன் ரசாயன தொழிற்சாலையை மூட இந்திய கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் : சிப்காட்டில் உள்ள சாஷன் ரசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி மக்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் சேகர் விடுத்துள்ள அறிக்கை:சிப்காட்டில் உள்ள சாஷன் ரசாயன தொழிற்சாலையில் "புரோமின்' என்கிற நச்சு ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் குடிகாடு கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவு கலெக்டர் கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி (திருமண மண்டபத்தில்) தங்க வைத்துள்ளார்.
 பாதுகாப்பு நடவடிக்கை பயன்படுத்த தெரியாததாலும், புரோமின் பாட்டில்களை தவறாக கையாண்டதாலும் இந்த வாயு கசிவு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அடிக்கடி இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்பட்டு இதனால் மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மக்களின் உயிருக்கு கேள்விக்குறியாக்கி வரும் இத் தொழிற்சாலையின் உரிமத்தை அரசு ரத்து செய்து, அலட்சியமாக செயல்பட்ட கடமை தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Source: dinamalar

No comments:

Post a Comment