Islamic Widget

March 18, 2011

அந்தமான் தீவில் கடத்தப்பட்ட படகு பரங்கிப்பேட்டையில் மீட்பு

பரங்கிப்பேட்டை: அந்தமான தீவில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு படகை கடத்தி வந்த கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஜாமின் உசேன் (வயது 40).இவர் சொந்தமாக மீன்பிடி படகு வைத்துள்ளார்.
                                       (பிடிப்பட்ட படகை படத்தில் கானலாம்)

இந்த படகை கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் பிஸ்தோ (28), ஷேம்கான் (30),விஜயகுமார் (30), சுரேஷ் (32),ஜரும் (32), கிறிஸ்டின் (28) ,ஜோஸ் (28), ஸ்டாலின் (30), ராஜன் (30) ஆகிய 9 பேரிடம் மீன் பிடிக்க கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை சரிபாதியை பிரித்து கொள்ளலாம்` என்று கூறின அதன்பேரில் அவர்கள் 9 பேரும் அந்தமான் தீவில் மீன் பிடித்து வந்து அவற்றை விற்று கிடைக்கும் வருமானத்தை உரிமையாளர் ஜாமின் உசேனுக்கு பாதியையும், மீதியை 9 பேரும் பகிர்ந்து கொண் டனர்.இதற்கிடையில் இந்த படகை உரிமையாளருக்குதெரியாமல் கடத்தி கொண்டு வந்தால் பிடிக்கப்படும் மீன்களை 9 பேரும் சேர்ந்து விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் திட்டம் போட்டதாக தெரிகிறது.
அதன்படி 9 பேரும் உரிமையாளருக்கு தெரியாமல் படகை கடத்தி கடல் வழியாக நேற்று பரங்கிப்பேட்டைக்கு வந்தனர்.இதற்கிடையில் கடத்தப்பட்ட படகு பரங்கிப்பேட்டை கடலில் இருப்பது ஜாஸ்மின் உசேனுக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளாறு கரையோரம் வந்த படகை வழிமறித்து பிடித்தனர்.


                          


                         (பிடிப்பட்ட படகை படத்தில் கானலாம்)

பின்னர் அவர்களிடம் இருந்த படகை பறிமுதல் செய்தனர்.ஆனால் படகை கடத்தி வந்த 9 பேரில் ஸ்டாலின், கிறிஸ்டின், பிஸ்தோ ஆகிய 3 பேர் மட்டுமே இருந்தனர்.அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுடன் வந்த 6 பேர் எங்கேனும் தலைமறைவாகி விட்டார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.படகு உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

source: dailythanthi , Photo: tntjpno

No comments:

Post a Comment