Islamic Widget

December 12, 2010

துபாயில் இந்தியாவி்ன் கருப்புப் பணம் ?

ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளின் நகரங்களில், குறிப்பாக துபாயில் இயங்கிவரும் வங்கிகளில் கடந்த சில மாதங்களாக மிகப் பெரும் அளவிற்கு நிதி வரத்து அதிகரித்துவருவது, இந்தியாவி்ன் கருப்புப் பணம் மத்திய கிழக்காசிய வங்கிகளில் குவிகிறதோ என்கிற ஐயத்தை எழுப்புவதாக செய்திகள் கூறுகின்றன.


இவ்வாறு சந்தேகிக்கப்படுவதற்குக் காரணம், அக்டோபர் மாதத்தில் மட்டும் ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பு நிதியின் அளவு 40 பில்லியன் திராம்கள் (அதாவது 11 பில்லியன் டாலர்கள்) அதிகரித்துள்ளது என்று ஐக்கிய அரபுக் குடியரசின் மைய வங்கி தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 10 பில்லியன் திராம் அளவிற்கு மட்டுமே உயர்ந்துவந்த வைப்பு நிதிகள், ஒரே மாதத்தில் 4 மடங்கு உயர காரணம் என்ன என்ற கேள்விக்கு, கருப்புப் பணம் பெருமளவிற்கு இரகசிய வைப்பு நிதிகளில் ஏற்கும் இரகசிய கணக்கு வங்கிகள் இயங்கும் சுவிஸ் நாட்டு அரசுடன் இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் செய்துகொண்ட ஒப்பந்தமே என்று கூறப்படுகிறது.
இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் ஒப்பந்ததத்தின் மூலம் சுவிஸ் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் போடப்படும் இந்தியர்களின் கணக்கு, நிதி விவரங்களை இந்திய அரசிற்கு தெரிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இதற்கு மேலும் கருப்புப் பணத்திற்கான பாதுகாப்பான நாடாக சுவிட்சர்லாந்து இருக்கப்போவதில்லை.
இதேபோன்று பெர்முடா, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், மேன் அண்ட் ஜெர்சி தீவு ஆகிய வரி விதிப்பற்ற சேமிப்பு சொர்க்க நாடுகளுடனும் (Tax Haven) இந்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மேலும் பல நாடுகளுடன் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் யாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல்தான் நடைமுறைக்கு வருகின்றன. ஆனால், அதுவரை எதற்குக் காத்திருக்க வேண்டும் என்று கருதும் கருப்புப் பண முதலைகள், தங்கள் நிதியை பாதுகாப்பான நாடுகளுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே, துபாயில் உள்ள வங்கிகளில் நாளும் வீங்கிக்கொண்டிருக்கும் வைப்பு நிதி கணக்குகளாகும் என்று கருதப்படுகிறது.
துபாய்க்கு ஏன்? என்ற கேள்விக்கும் பதில் உள்ளது. இங்கும் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதிகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், அந்த நிதிகளுக்கு யார் வாரிசுதாரர் என்பதை அளிக்கவேண்டும். இதனை ஷாரியத் விதி வலியுறுத்துகிறது.
மேலும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளில் உள்ள வங்கிகளில் புதிதாக கணக்குத் தொடங்குவது என்பது கடினமாக ஒரு விடயமல்ல என்று கூறப்படுகிறது.
துபாயிலுள்ள சுதந்திர வர்த்தக மண்டலத்தில் (Dubai Free Trade Zone) ஒரு நிறுவனத்தை பதிவு செய்து, அதில் துபாயில் வாழக்கூடிய இந்தியர்களை இயக்குனர்களாக நியமித்துவிட வேண்டும். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கிவிட்டு, அதில் அயல் நாட்டு வங்கிகளில் உள்ள நிதிகளை இந்தக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். இவை யாவும் வர்த்தக வருவாய் அல்லது ஆலோசனை வருவாய் (Consultation Fee) என்ற பெயரில் சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். வரி கிடையாது, விசாரணை கிடையாது. இரண்டே இரண்டு விடயங்களைத்தான் துபாய் வங்கிகள் உற்று நோக்குகின்றன. ஒன்று, போதைப் பொருள் கட்டதலா? இரண்டு பயங்கரவாத தொடர்பு கொண்டவையா? என்பதே.
துபாயில் உள்ள ஐக்கிய அரபுக் குடியரசு வங்கிகளில்தான் இப்படிப்பட்ட கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்று அர்த்தமில்லை, துபாயிலுள்ள பன்னாட்டு வங்கிகளின் கிளைகளிலும் கணக்குகளைத் தொடங்கலாம் அல்லது கணக்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.
எனவே, இந்திய அரசு ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளுடன் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளும் வரை, துபாயும் இந்தியாவில் ஊழல் வழியாகவோ அல்லது வர்த்தக வழியாகவோ கொள்ளயடிக்கப்படும் கருப்புப் பணத்தை சேமிக்கும் மற்றொரு சொர்க்கமாக இருக்கும்.

No comments:

Post a Comment