வேலூர்: தொரப்பாடியில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி முடித்த அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசிய சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் துரைமுருகன்.... ஒரு தேசிய பயிற்சி மையம் ஆரம்பித்து அதன்மூலம் சிறைத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்க தமிழக முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி அமைக்கும் போது அந்த தேசிய பயிற்சி மையத்தை வேலூரில் அமைக்க முயற்சி செய்வேன். சிறைக்குள் செல்போன், சிம்கார்டு செல்வது குறித்து கேட்டபோது சிம்கார்டு சிறியது. அதை வாழைப்பழத்திற்குள் வைத்து எடுத்து செல்கின்றனர். அதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கின்றனர். சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தினால் செல்போன் வேலை செய்யாது.
நானும் அதிகாரிகளும் திகார் ஜெயிலுக்கு விரைவில் சென்று பார்க்க உள்ளோம். தமிழக சிறைகளில் பொதுதொலைபேசி அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அப்படி அமைத்தால் கைதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பேசிக்கொள்ளலாம். அவ்வாறு பேசும் கைதிகளின் பேச்சு பதிவு செய்யப்படும். இதனால் சதித்திட்டம் தீட்ட வாய்ப்பின்றி போகும்.
ராஜாஸ்தானில் திறந்தவெளி சிறைச்சாலை உள்ளதாக கூறியுள்ளனர். அங்கு நான் நமது அதிகாரிகளுடன் சென்று பார்த்த பின்பு தமிழ்நாட்டில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவோம் என்றார்.
Source:inneram
No comments:
Post a Comment