மும்பை: இந்திய பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மும்பை அரண்மனை வீட்டின் முதல் மாத மின் கட்டணமாக ரூ. 70 லட்சம் வந்துள்ளதாம். முகேஷ் அம்பானி மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளார். இது உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாகும் என்றுக் கூறப்படுகிறது. இந்த அரண்மனை வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார். இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ. 70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம்.
இந்த அரண்மனை வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். புது வீட்டுக்குப் போய் ஒரு மாதமே ஆன நிலையில். இந்த வீட்டில் ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஒரு சாதாரண குடும்பத்தில் அனைத்து மின் சாதனப் பொருட்களின் பயன்பாட்டிற்காக சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இது போக மீதி 70 லட்சம் ரூபாய் மின் கட்டணமாக கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி. இந்த ஒரு மாத பில் கட்டணம், சாதாரணமாக பயன்படுத்தும் 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமமாகும்.
Source:inneram
No comments:
Post a Comment