Islamic Widget

November 22, 2010

தமிழகம் புதுவையில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் திங்கள்கிழமையன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் தமிழக தென்மேற்குப் பகுதியில் இலங்கையில் இருந்து தமிழகம் வரை பரவியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இப்போது வலுவிழந்துவிட்டது. எனினும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் மீது வளிமண்டல உயர் அடுக்குகளில் மேகக் கூட்டங்களிடையே சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 310 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
Source:inneram

No comments:

Post a Comment