புதுவை: எதிர் வரும் 2011ம் ஆண்டிற்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்'' என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.
காரைக்கால் சுற்று வட்டாரங்களில் புதுவை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்க செல்வதால்தான் பிரச்சனை ஏற்படுவதாகவும், அதேபோன்று இலங்கை மீனவர்களும் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அடுத்தாண்டிற்குள் மீனவர்கள் தாக்கப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்று கூறிய அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் தமிழர்களின் வீடுகள் புனரமைக்கப்படும் என்றும் மேலும் 37 ஆயிரம் பேருக்கு அவர்கள் வசித்த இடங்களிலேயே புதிய வீடுகள் தரப்படும் என்றும் கூறினார்.
அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கொழும்பு பயணத்தின்போது வீடுகளை பெறும் இலங்கை பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ள அவர் கொழும்பில் இருப்பதுபோல் தமிழர்கள் பகுதியில் இந்திய தூதரகத்தின் கிளை விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Source:inneram
November 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment