Islamic Widget

November 26, 2010

"மங்களூரு விபத்துக்கு விமானி மீது பழி"

                                                                       மங்களூரில் விபத்துக்குள்ளான விமானம்

தென் இந்தியாவின் மங்களூருவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட ஒரு விமான விபத்துக்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியின் மீதே தவறு உள்ளது என்று அது குறித்து நடத்தப்பட்ட அதிகாரபூர்வமான விசாரணையில் முடிவு செய்துள்ளது.


அந்த விபத்தில் அதிலிருந்த கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டது. அதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான ஓட்டியான ஸ்லாட்கோ க்ளூஸியா அந்த விமான பயணத்தின் பெரும்பாலான நேரத்தில் தூங்கினார் என்றும், அதன் காரணமாக விமானம் தரையிரங்கும் நேரத்தில் அவர் உடல் ஒருங்கிணைந்த நிலையில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த விமானம் மங்களூரு விமான நிலையில்த்தில் இறங்க ஓடு பாதையை அணுகிய போது சரியான் கோணத்தில் அணுகவில்லை என்றும், விமானத்தை அப்போது தரையிறக்காமல் மீண்டும் மேலேறி பிறகு தரையிறங்க முயற்சி செய்யுமாறு உடனிருந்த துணை விமான ஓட்டுனரின் எச்சரிக்கையை நிராகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான ஓட்டியின் நடவடிக்கை காரணமாக அந்த போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையை கடந்து ஒரு மலையிடுக்கில் விழுந்ததால் வெடித்து தீப்பிடித்தது.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மோசமான இந்த விமான விபத்தில் எட்டு பேர் உயிர் தப்பினர்.

Source:bbctamil

No comments:

Post a Comment