அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தில்லி ஜூம்மா மசூதி இமாம் அகமது புகாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜூம்மா மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பேசிய புகாரி, இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் மூடப்பட்ட அறையில் முடிவுகளை எடுக்க முடியாது என்றார் அவர்.
நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சியில்லை. மூடப்பட்ட அறையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என புகாரி தெரிவித்தார்.
தீர்ப்பில் திருப்தியில்லை என்றாலும், அமைதியை சீர்குலைக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முஸ்லீம்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment