உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.
இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.
சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- இறப்புச்செய்தி
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு இராமகோபாலன் வேண்டுகோள்
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
No comments:
Post a Comment