Islamic Widget

October 01, 2010

தீர்ப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு: ப.சிதம்பரம் திருப்தி

                                                        

அயோத்தி தீர்ப்புக்கு பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பு மரியாதையாகவும், கண்ணியமிக்கதாகவும் இருந்தது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திருப்தி தெரிவித்தார்.


தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.


அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்துக்குச் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என்றும் கூறுவது நியாயமான கணிப்புதான். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தற்போது செய்யக்கூடியது எதுவும் இல்லை. தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தீர்ப்பு இப்போதைக்கு செயல்பாட்டுக்கு வராது என சிதம்பரம் தெரிவித்தார்.


தீர்ப்பு உண்மையில் ஒரு முக்கிய ஆவணம்தான். எனினும் அது இப்போது செயல்பாட்டில் இல்லை என்றார் அவர்.


இந்தத் தீர்ப்பு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை வலுவிழக்கச் செய்யுமா என சிதம்பரத்திடம் கேட்டபோது, அதை இந்தத் தீர்ப்பால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அவர், அது நடந்தது 1992-ம் ஆண்டில் என பதிலளித்தார்.

No comments:

Post a Comment