நெஞ்சாலைத் துறை இந்த பாலத்தை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் உடைப்பு, பாலத்தில் மேல் தண்ணீர் தேங்குவது, பக்கவாட்டு சுவர்கள் உடைப்பு என வலுவிழந்து வருகிறது. சிறிய வாகனங்கள் சென்றால் கூட பாலம் வலுவிழுந்து விட்டதை உணரும் வகையில் சத்தம் கேட்கிறது.பாலத்தில் கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. தற்போது பி.முட்லூர் - சி.முட்லூர் இடையே வெள்ளாற்றில் பாலம் கட்டி பயன்பாட் டிற்கு வர உள்ள நிலையிலும், சென்னையில் இருந்து வடலூர், நெய்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு முக்கிய பாலமாக புவனகிரி பாலம் இருந்து வருகிறது. பாலம் வலுவிழுந்து விட்டதால் புதிய பாலம் கட்டுவவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் இதுவரை பாலம் கட்டப்படவில்லை.
முக்கிய பாலமான புவனகிரி வெள்ளாற்றுப் பாலம் புதியதாக கட்ட ஆர்வம் காட்டாதது ஒருபுறம் என்றாலும், இருக்கும் பாலத்தை பாதுகாப்பதில் கூட நெடுஞ்சாலைத்துறை ஆர்வம் காட்டவில்லை. பாலத்தில் அதிக அளவில் மண் சேர்ந்து அடைத்துக் கொண்டதால் தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலை உள்ளது. அதனால் லேசான மழை பெய்தால் கூட குளம் போல் பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது.ஆற்றில் படகுகள் செல் வது போல் பாலத்தின் மேல் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்திச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாலம் மேலும் வலுவிழந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
source: dinamalar
No comments:
Post a Comment