கடலூர்:பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர் பாக 20 பேர் மீது வழக் குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.கடலூர் அடுத்த மருதாடு காலனியைச் சேர்ந் தவர் மணி மகள் ராஜஸ்ரீ (16). கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட் டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மருதாடு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த குமராபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் (20), ராஜஸ்ரீயிடம் பேரைக் கேட்டு கிண்டல் செய்து, அவரது ஆடையை பிடித்து இழுத்தார்.
இதனைக் கண்ட மருதாடு காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து செல் வத்தை வீடு புகுந்து தாக்கினர். மேலும், மருதாடு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த குமராபுரம் காலனியை சேர்ந்தவர்களையும் தாக்கினர். அதில காயமடைந்த செல்வம், கலியமூர்த்தி, சித்தார்த்தன் (25), ஜாகீர் உசேன்(19), முரளி (19) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து ராஜஸ்ரீ, செல்வம், கலியமூர்த்தி ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் தனித்தனியே வழக் குப் பதிந்து 20 பேரை தேடிவருகின்றனர்.
October 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment