கிள்ளை: சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்த "ஷெட்' விற்றதை தடுத்ததால் கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதியில் சில தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்தது. சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக் குட் பட்ட முழுக்குத்துறை கிராமத் தில் "லெப் பர்சி மிஷின்' தொண்டு நிறுவனம் பல் வேறு வளர்ச்சிப் பணிகளை மேற் கொண் டது. அப்போது அவர்கள் பணியில் ஈடுபடும்போது தங்குவதற்காக அமைக்கப் பட்ட இரும்பு ஆங்கிள் மற் றும் தகர ஷீட்டினால் ஆன "ஷெட்'டை கிராமத்தினரின் செயல்பாட்டிற்கு வழங்கினர். இந்நிலையில் அந்த "ஷெட்'டை கிராம வளர்ச் சிக்காக தனி நபரிடம் கிராமம் சார்பில் விற்பனை செய்துள்ளனர்.
இதையறிந்த கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர், தொண்டு நிறுவனம் மூலம் கட் டப்பட்ட சமுதாயக் கூடத்தை விற்பனை செய்வது தவறு, தடை விதிக்க வேண்டும் என கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கிள்ளை போலீசார் விசாரணை நடத்தினர். ஆவேசமடைந்த முழுக் குத்துறை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட் டோர் தலைவர் சோழன் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அண்ணாமலை நகர் இன்ஸ் பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
No comments:
Post a Comment